தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காரமடை அரங்கநாதர் தேரோட்டம்; இன்று போக்குவரத்து மாற்றம் 

காரமடை அரங்கநாதர் தேரோட்டம்; இன்று போக்குவரத்து மாற்றம் 

காரமடை அரங்கநாதர் தேரோட்டம்; இன்று போக்குவரத்து மாற்றம் 


ADDED : மார் 12, 2025 07:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2025 07:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை; காரமடை அரங்கநாதர் கோவில் தேரோட்டத்தினை முன்னிட்டு, இன்றும் நாளையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து போலீசார் அறிவிப்பு:

 கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் லாரிகள், பஸ்கள் மற்றும் கார்கள் அனைத்தும் கோட்டைப்பிரிவு கடந்து, சக்தி இன்ஜி., கல்லுாரி வளைவில் இடது புறம் திரும்பி பி.ஜி.புதுார், திம்மம்பாளையம் மற்றும் தோலம்பாளையம் ரயில்வே கேட்டில் இடதுபுறம் திரும்பி, மங்களக்கரை புதுார் வழியாக, டீச்சர்ஸ் காலனி சென்று மேட்டுபாளையம் செல்லலாம்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து, கோவை செல்லும் வாகனங்கள், காந்திநகர் அருகே இடதுபுறம் திரும்பி தொட்டிபாளையம், கண்ணார்ப்பாளையம், களத்தியூர் ரயில்வே கீழ் பாலம் வழியாக கோட்டை பிரிவு சென்று கோவை செல்லலாம்.

 கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து கன்டெய்னர் லாரிகளும் கோட்டை பிரிவு, களத்தியூர் ரயில்வே கேட், கண்ணார்பாளையம் நான்கு வழி சந்திப்பு, தென்திருப்பதி நால்ரோடு வழியாக மேட்டுபாளையம் செல்லலாம்.

 மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை செல்லும் அனைத்து கன்டெய்னர் லாரிகளும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து, அன்னுார் செல்லும் சாலை வழியாக, தென்திருப்பதி நால்ரோடு சென்று வலது புறம் திரும்பி கண்ணார்பாளையம், களத்தியூர் ரயில்வே பாலம் வழியாக கோவை செல்ல வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us