/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காரமடை தேர்த்திருவிழா : பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்
/
காரமடை தேர்த்திருவிழா : பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்
காரமடை தேர்த்திருவிழா : பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்
காரமடை தேர்த்திருவிழா : பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்
ADDED : மார் 04, 2025 12:28 AM
மேட்டுப்பாளையம் :
காரமடை அரங்கநாதசுவாமி கோவிலில் மாசிமகத் தேர்த்திருவிழா வரும் 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது.
கடந்த முறை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தேர் திருவிழாவில் கலந்து கொண்டனர். இந்த முறை அதை விட அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் கூறுகையில் ''பக்தர்கள் பாதுகாப்பில் குறைப்பாடு இருக்காது. கோவிலை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தேர் திருவிழாவின் போது கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்படுவார்கள். சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அனைத்து பகுதிகளும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். மேலும் பார்க்கிங் வசதி, போக்குவரத்து மாற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.