/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுகுணா கல்லுாரியில் கராத்தே போட்டி
/
சுகுணா கல்லுாரியில் கராத்தே போட்டி
ADDED : ஆக 14, 2024 08:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : சுகுணா கல்லுாரியில் நடந்த, மாநில அளவிலான கராத்தே போட்டியில், மாணவர்கள் அசத்தலாக விளையாடி, வெற்றி வாகை சூடினர்.
இண்டோஹிடோ மாநில அளவிலான ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி, சுகுணா இன்ஜி., கல்லுாரி அரங்கில் நடந்தது.
தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க மாநில துணைத்தலைவர் ஈஸ்வரகுமார் தலைமை வகித்தார்.
கோவை மாவட்ட கராத்தே சங்க நிர்வாகிகள் செல்வகுமார், கருத்தோவியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்போட்டியில், 26 மாவட்டங்களை சேர்ந்த 450க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.