/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில வாலிபால் போட்டி; கற்பகம் இரண்டாமிடம்
/
மாநில வாலிபால் போட்டி; கற்பகம் இரண்டாமிடம்
ADDED : மே 29, 2024 12:46 AM
கோவை;மாநில அளவிலான வாலிபால் போட்டியில், ஈச்சனாரி கற்பகம் பல்கலை அணி இரண்டாமிடம் பிடித்தது.
மாநில அளவிலான வாலிபால் போட்டி ஈரோடு மாவட்டம் பி.கே.பாளையத்தில் நடந்தது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 30க்கும் மேற்பட்ட அணிகள், நாக் அவுட் முறையில் போட்டியிட்டன.
இதன் அரையிறுதிப்போட்டியில், திருப்பூர் அணியை 3 - 1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற கற்பகம் அணி, கோவை வி.கே.குரூப் அணியுடன், 3 - 2 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து, இரண்டாமிடத்தை பிடித்தது.
மாநில போட்டியில் இரண்டாமிடம் பிடித்த, கற்பகம் மாணவர்களை பல்கலை துணைவேந்தர் வெங்கடாசலபதி, பதிவாளர் ரவி, உடற்கல்வி இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.