/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்களில் கார்த்திகை வழிபாடு
/
கோவில்களில் கார்த்திகை வழிபாடு
ADDED : மே 09, 2024 04:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை, : உடுமலை முத்தையா பிள்ளை லே அவுட்டில், அகிலாண்டேஸ்வரி சமேத சோழீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சித்திரை மாத கார்த்திகையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து வெள்ளி தேரில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவில் வளாகத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதே போல், உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில் மற்றும் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.