/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கருணாநிதி நினைவு தினம்; தி.மு.க., அமைதி ஊர்வலம்
/
கருணாநிதி நினைவு தினம்; தி.மு.க., அமைதி ஊர்வலம்
ADDED : ஆக 07, 2024 11:53 PM

கோவை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 6ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கோவையில் தி.மு.க., சார்பில் அமைதி ஊர்வலம் நேற்று நடந்தது.
தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி தலைமை வகித்தார்; மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், ரவி முன்னிலை வகித்தனர். சித்தாபுதுாரில் துவங்கி வி.கே.கே., மேனன் ரோடு வழியாக காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் முன்புள்ள அண்ணாதுரை சிலை முன் வந்தடைந்தது. அங்கு அலங்கரிக்கப்பட்டு இருந்த கருணாநிதி உருவப்படத்துக்கு, மலர்துாவி மரியாதை செலுத்தப்பட்டது.
அமைச்சர் முத்துச்சாமி கூறுகையில், ''கணியூரில் கருணாநிதி சிலையை நாளை (ஆக., 9) முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதன் கீழ்ப்பகுதியில் நுாலகம் அமைக்கப்படுகிறது. கட்சிக்கு சொந்தமாக, 16 சென்ட் நிலம் இருக்கிறது. அவ்விடத்தில் கருணாநிதி சிலை நிறுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,'' என்றார்.
ஊர்வலத்தில், முன்னாள் அமைச்சர் பொங்கலுார் பழனிச்சாமி, மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன், மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ், பொருளாளர் முருகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.