
செய்முறை:
முதலில் பச்சரிசி மற்றும் துவரம்பருப்பை அலசி, பின் குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஐந்து விசில் வைத்து நன்கு குழைய வேக வைத்துக் கொள்ள வேண்டும். கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, பூசணிக்காய், முருங்கைக்காய்போன்றவற்றை ஒரே மாதிரியான அளவில் வெட்டிக் கொள்ள வேண்டும். பின் வெல்லம் மற்றும் தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.
வேர்க்கடலையை ஊற வைத்து அதனை வேக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் புளி போட்டு தண்ணீர் ஊற்றி, பின் புளிக்கரைசல் தயாரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், மல்லி விதைகள் ஆகியவற்றை வறுத்துக் கொண்டு பின் அதனை மிக்சி ஜாரில் சேர்த்து கொரகொரவென அரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு அகலமான பாத்திரம் வைத்து கெட்டியான புளிக்கரைசலை ஊற்றி, உடன் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி, அரிந்து வைத்துள்ள காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் அதில் உப்பு, மஞ்சள் துாள் மற்றும் பெருங்காயம் சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகள், முக்கால்பதம் வெந்த பிறகு அதில் வேக வைத்தவேர்கடலையை சேர்க்க வேண்டும்.
பின்,அதில் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியினையும் சேர்க்க வேண்டும். அனைத்தும் கொதித்து ஒன்று சேர்ந்து நன்றாக வாசனை வரும் நேரத்தில், துருவிய வெல்லம் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இப்போது அதில் வேக வைத்துள்ள பருப்பு மற்றும் சாதம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
அடுப்பில் ஒரு சின்ன பான் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்த பின், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து விட்டு பின் அதனை சாதம் உள்ள கலவையில் சேர்த்து கிளறி விட்டால் ருசியான கதம்ப சாதம் தயார்.