/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'காட்சியா' தொழில்நுட்ப கலந்தாய்வு கூட்டம்
/
'காட்சியா' தொழில்நுட்ப கலந்தாய்வு கூட்டம்
ADDED : ஜூன் 27, 2024 10:17 PM
கோவை : கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் (காட்சியா) சங்கத்தின் தொழில்நுட்பக் கலந்தாய்வு கூட்டம் லட்சுமி மில்ஸ் அருகில் உள்ள ஜோன் ஓட்டலில் நடந்தது.
தலைவர் விஜயகுமார் வரவேற்று, பொறியாளர்களுக்கு விபத்து காப்பீடு, 'காட்சியா' சமூக சேவை அமைப்பின் வாயிலாக, நலிவடைந்த அரசு பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தாய் அல்லது தந்தை இழந்த குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் மற்றும் அவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள், எழுதுபொருட்கள் வழங்குவது குறித்தும் பேசினார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, பிளம்பிங் கன்சல்டன்ட் நிறுவனத் தலைவர் ஹரிஹரசுதன், பிளம்பிங் வேலைகளில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பேசினார்.
துணைத் தலைவர் செவ்வேள், கட்டட கண்காட்சியின் (BUILD EXCON-24) துணை தலைவர்களை அறிமுகப்படுத்தி பேசினார். சங்க செயலாளர் ராஜரத்தினம், பொருளாளர் மணிகண்டன், இணை செயலாளர் பிரேம்குமார்பாபு, இணைப்பொருளாளர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.