ADDED : செப் 10, 2024 02:10 AM
அ நிறம் | அளவு
சூலூர்:குமாரபாளையத்தில் வேலவன் காவடி குழுவினரின் அரங்கேற்ற விழா நடந்தது.
கருமத்தம்பட்டி அடுத்த க.ராயர்பாளையம் வேலவன் காவடி குழு சார்பில், குமாரபாளையத்தில் காவடி ஆட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
குமாரபாளையம் ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை ஒட்டி, காவடி ஆட்ட அரங்கேற்ற விழா நடந்தது.
ஆசிரியர் தர்மலிங்கம் தலைமையில் குழுவினர் காவடி ஆடினர். பல்வேறு விதமான ஆட்டங்களை ஆடிய குழுவினர், பார்வையாளர்களின் பாராட்டுதல்களை பெற்றனர்.
