/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தைகளை காவு வாங்கும் 'காவசாகி!' 8 குழந்தைகளை காப்பாற்றிய கோவை அரசு மருத்துவமனை
/
குழந்தைகளை காவு வாங்கும் 'காவசாகி!' 8 குழந்தைகளை காப்பாற்றிய கோவை அரசு மருத்துவமனை
குழந்தைகளை காவு வாங்கும் 'காவசாகி!' 8 குழந்தைகளை காப்பாற்றிய கோவை அரசு மருத்துவமனை
குழந்தைகளை காவு வாங்கும் 'காவசாகி!' 8 குழந்தைகளை காப்பாற்றிய கோவை அரசு மருத்துவமனை
ADDED : மே 13, 2024 01:09 AM

கோவை;கோவை அரசு மருத்துவமனையில், அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட, 8 குழந்தைகளை டாக்டர் குழுவினர் காப்பாற்றினர்.
பல்லடத்தை சேர்ந்த மூன்று மாத குழந்தை, அங்குள்ள மருத்துவமனையில் உடல் நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டு இருந்தது. பல கிசிச்சைகள் அளிக்கப்பட்டும் முன்னேற்றம் இல்லாததால், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
இங்கு பல பரிசோதனை மேற்கொண்டதில், குழந்தைக்கு 'காவசாகி' எனப்படும் அரிய வகை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழந்தை, குழந்தைகள் நல பிரிவில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.
மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது:
'காவசாகி' எனப்படும் அரிய வகை நோயினால் பாதிக்கப்படும் குழந்தை, தொடர் காய்ச்சல், கை, கால் வீக்கம், தோல் உரிவது, நெறி கட்டுவது போன்ற அறிகுறிகளுடன் துவங்கி பின் இருதயத்தையும், இருதய ரத்த நாளங்களையும் பாதிக்கும்.
வளர்பருவத்தில் இருதய பாதிப்புகள் ஏற்பட்டு, உயிரிழப்பும் ஏற்படும். நோயை கண்டறிந்தவுடன், குழந்தைக்கு உடனடியாக ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள 'இம்யூனோ குளோபுலின்' எனப்படும் மருந்து செலுத்தப்பட்டது. இதன் பின் குழந்தைக்கு காய்ச்சல் குறைந்தது. நல்ல உடல் நலத்துடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில், இரு குழந்தைகள் இந்த நோயினால் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் வாயிலாக 'இம்யுனோ குளோபுலின்' மருந்தது செலுத்தப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு வருடத்தில், கோவை அரசு மருத்துவமனையில் இந்நோயினால் பாதிக்கப்பட்ட, 8 குழந்தைகளுக்கு ரூ.8 லட்சத்தில் இந்த மருந்து செலுத்தப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.