/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ரகசியங்களை வைத்துக்கொண்டு மிரட்டினால் தெரிவிக்க வேண்டும்'
/
'ரகசியங்களை வைத்துக்கொண்டு மிரட்டினால் தெரிவிக்க வேண்டும்'
'ரகசியங்களை வைத்துக்கொண்டு மிரட்டினால் தெரிவிக்க வேண்டும்'
'ரகசியங்களை வைத்துக்கொண்டு மிரட்டினால் தெரிவிக்க வேண்டும்'
ADDED : செப் 05, 2024 12:17 AM
தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், 'சைபர் கிரைம்' விழிப்புணர்வு சிறப்பு கருத்தரங்கம், நேற்று நடந்தது.
கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை வகித்தார். மாவட்ட சைபர் கிரைம் தொழில்நுட்ப பிரிவு எஸ்.ஐ., ஆனந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், தனிப்பட்ட ஒருவரின் ரகசியங்களை வைத்து, அவர்களை மிரட்டி பணம் பறிப்பது, நமக்கு உதவி செய்வது போல நடித்து, வங்கி கணக்கில் இருந்து நமக்கே தெரியாமல் பணம் எடுப்பது, பரிசுப் பொருட்கள் வழங்குவது போல் ஏமாற்றுவது என, பல்வேறு விதமாக ஏமாற்றுபவர்கள் உள்ளனர். நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். அவ்வாறு ஏமாற்றப்பட்டால், உடனடியாக 1930 என்ற எண்ணில், சைபர் கிரைம் போலீசாரை தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்க வேண்டும், என்றார்.
கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.