/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.எப்.சி., சப்-வே, பீட்சா ஹட்- செம ஹாட்டு! பாரம்பரிய உணவுகள் கேட்குமே ரிபீட்டு!
/
கே.எப்.சி., சப்-வே, பீட்சா ஹட்- செம ஹாட்டு! பாரம்பரிய உணவுகள் கேட்குமே ரிபீட்டு!
கே.எப்.சி., சப்-வே, பீட்சா ஹட்- செம ஹாட்டு! பாரம்பரிய உணவுகள் கேட்குமே ரிபீட்டு!
கே.எப்.சி., சப்-வே, பீட்சா ஹட்- செம ஹாட்டு! பாரம்பரிய உணவுகள் கேட்குமே ரிபீட்டு!
ADDED : ஆக 18, 2024 01:17 AM

உணவு அரங்கில், 20க்கும் மேற்பட்ட கடைகளில் மாவட்டம் வாரியாக ஸ்பெஷல் உணவுகளை ருசிக்கலாம். சைவம், அசைவம் என இரு வகைகளிலும், வெவ்வேறு ருசிகளில் விருந்து காத்திருக்கிறது.
பீட்சா பிரியர்களுக்காக இருக்கவே இருக்கிறது பீட்சா ஹட். சைவத்தில் மார்கரீட்டா, கார்ன் அண்டு ஆனியன், பனீர் அண்டு ஆனியன் விற்பனைக்கு உள்ளது. அசைவத்தில், சிக்கன் சாசேன், தாபே டா கீமா வகைகள் உள்ளன. இவை தவிர, பிரெட் ஸ்டிக்ஸ், பிரவுனி போன்றவைற்றையும் ஈவன்ட்களை ரசித்தவாறே ருசிக்கலாம்.
சப்வே பிரியர்களுக்காக, ஆலு பட்டி, பனீர் டிக்கா, சிக்கன் ஸ்லைஸ், தந்துாரி சிக்கன், குக்கி ஆகியவையும் விற்பனைக்கு உள்ளன.
கே.எப்.சி., ஸ்டாலில், ஹாட் அண்டு கிரிஸ்பி சிக்கன், சிக்கன் போன்லெஸ், ஹாட் விங்ஸ், சிக்கன் பாப்கார்ன், கிளாஸிக் சிக்கன் பர்கர், வெஜ் பர்கர் ஆகியவை உங்களின் பசிக்கும், ருசிக்கும் விருந்தாக இருக்கும்.
கொஞ்சம் லைட்டா கொறிக்கலாம் என்பவர்களுக்காக, புராபிள்ஸ் ஸ்டாலில் ஸ்டிக் வாபிள்ஸ் விற்பனைக்கு இருக்கின்றன. டார்க் சாக்கோ, மில்க் சாக்கோ, வொய்ட் சாக்கோ, டிரிபிள் சாக்கோ ஆகிய 5 பிளேவர்களில் ஸ்டிக் வாபிள்ஸ் கிடைக்கிறது. இவை தவிர, வெஜ் மோமோஸ், சிக்கன் மோமோஸ், சாக்கோ ஸ்ட்ராபெர்ரி, மில்க் சாக்கோ ஸ்ட்ராபெர்ரி, வொய்ட் சாக்கோ ஸ்ட்ராபெர்ரி, ஓரியோ சாக்கோ ஸ்ட்ராபெர்ரி, டிரிபிள் சாக்கோ ஸ்ட்ராபெர்ரி ஆகியவற்றையும் நீங்கள் கட்டாயம் ருசிக்கலாம்.
நமக்கெல்லாம் மதுரை ஸ்டைல்ல காரசாரமாக வேணும் என்பவர்களுக்கு, மதுரை பன் பரோட்டா ஸ்டாலில் விதவிதமான பரோட்டா, மீன் குழம்புடன் சோறு, மீன், இறால், நண்டு, நத்தைக் கறி, சங்கு என கடல் உணவுகளில் ஆம்லெட் முதல் கிரேவி, பிரை வரை ஏராளம் உண்டு. பினிஷிங் டச்சாக, ஜிகர்தண்டாவும் இருக்கு.
திண்டுக்கல் வேணு பிரியாணியில், மட்டன் பிரியாணியில் துவங்கி, கோலா உருண்டை, சிக்கன், காடை பிரை, கரண்டி ஆம்லெட் வரை சுடச் சுட பரிமாறுகிறார்கள்.இட்லி, இடியாப்பம், சேவை, நுாடுல்ஸ், பிரைடு ரைஸ் வகையறாக்களுக்கும் பஞ்சமில்லை. ஜப்பான் ரேமன், கொரியன் பாவோ, கொரியன் பிரைடு விங்ஸ் என தேசம் தாண்டியும் ருசிக்கலாம்.
புட்ஜாக் அரங்கில், விதவிதமான மாக்டெய்ல்களை வகைக்கு ஒன்றாக ருசிக்கலாம்.
பகோடா, சமோசா, சாட் வகைகள், பருத்திப்பால், தேங்காய்ப்பால், இளநீர் பாயாசம், பானகம், முடவாட்டுக்கால் சூப், சிறுதானிய உணவுகள், நவதானிய லட்டு என நீள்கிறது பட்டியல். சுருக்கமாக சொன்னால், நீங்க எந்த வகை சாப்பாட்டு பிரியராக இருந்தாலும் அந்த வகையில் திருப்தியாக உண்ணலாம். ஒரு நடை வந்துதான் பாருங்களேன்!

