/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.ஜி. மருத்துவமனையில் நவீன சிகிச்சை வசதிகள் துவக்கம்
/
கே.ஜி. மருத்துவமனையில் நவீன சிகிச்சை வசதிகள் துவக்கம்
கே.ஜி. மருத்துவமனையில் நவீன சிகிச்சை வசதிகள் துவக்கம்
கே.ஜி. மருத்துவமனையில் நவீன சிகிச்சை வசதிகள் துவக்கம்
ADDED : மே 27, 2024 01:46 AM

கோவை;கோவை கே.ஜி. மருத்துவமனையில் ரூ.30 கோடி மதிப்பில், அதிநவீன சிகிச்சை வசதிகள் நேற்று துவக்கி வைக்கப்பட்டன.
ரோபோடிக் சர்ஜிக்கல் சூட் பிரிவு, லேப்ராஸ்கோபிக் சர்ஜிக்கல் சூட் பிரிவு, அட்வான்ஸ் கேத் லேப், நெக்ஸ்ட் ஜெனரேஷன் பெர்ப்யூஷன் சிஸ்டம், டிஜிட்டல் ரேடியோகிராபி, செஞ்சுரியன் ரேடியோகிராபி, செஞ்சுரியன் விஷன் சிஸ்டம் ஆகிய புதிய சிகிச்சை வசதிகளை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:
டாக்டர் பக்தவத்சலத்தின் ஆலோசனையின்படி, தமிழகத்தில் உள்ள, 8713 துணை சுகாதார நிலையம், 2286 ஆரம்ப சுகாதார நிலையம், 10,999 மருத்துவமனைகளில் 'லோடிங் டோஸ்' எனும் உயிர்காக்கும் மாத்திரைகள் வாங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதுவரை ஆரம்ப சுகாதார நிலையத்தில், 7412 பேரும், துணை சுகாதார நிலையத்தில், 484 பேரும் என மொத்தம், 7896 பேர் பயன் அடைந்துள்ளனர்.
கே.ஜி. மருத்துவமனையில் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ள, 'ரோபோடிக் சர்ஜிக்கல்' சிகிச்சையால், நேரம் குறைவு, குறைந்த ரத்த போக்கு, வலி குறைவு, தழும்பு இல்லை, தொற்று இல்லை, விரைவில் வீடு திரும்பலாம், செலவும் குறைவு. நோயாளிகளுக்கு நன்மை கிடைக்கும்.
அவ்வாறு, அவர் பேசினார்.
முன்னதாக, மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம், அமைச்சருக்கு 'டைனமிக் இந்தியன் ஆப் மில்லினியம்' விருதை வழங்கினார். நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவத்சலம் மற்றும் மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

