/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
39 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
/
39 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
ADDED : ஏப் 10, 2025 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, 39 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, ஒருவரை கோமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே, கோமங்கலம்புதுாரில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மளிகை கடை அருகே சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், கோமங்கலம்புதுார் ஜஸ்டின் பால்ராஜ்,42, என்பதும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், 39 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.