/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கேலோ இந்தியா' டேக்வாண்டோ சிட்டி 'லீக்' ஒவ்வொரு பிரிவிலும் நான்கு பரிசுகள் தாராளம்
/
'கேலோ இந்தியா' டேக்வாண்டோ சிட்டி 'லீக்' ஒவ்வொரு பிரிவிலும் நான்கு பரிசுகள் தாராளம்
'கேலோ இந்தியா' டேக்வாண்டோ சிட்டி 'லீக்' ஒவ்வொரு பிரிவிலும் நான்கு பரிசுகள் தாராளம்
'கேலோ இந்தியா' டேக்வாண்டோ சிட்டி 'லீக்' ஒவ்வொரு பிரிவிலும் நான்கு பரிசுகள் தாராளம்
ADDED : மார் 03, 2025 04:09 AM

கோவை, : 'டேக்வாண்டோ பெடரேஷன் ஆப் இந்தியா' உத்தரவின்படி, தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கம் சார்பில் 'அஸ்மிதா' (கேலோ இந்தியா) பெண்களுக்கான டேக்வாண்டோ சிட்டி லீக் போட்டி, மாரண்ண கவுடர் பள்ளியில் நேற்று நடந்தது.
ஜூனியர் பிரிவில், 42, 44, 46, 49, 52, 55, 56, 59, 63, 68 கிலோவுக்குட்பட்ட எடை மற்றும் 68 கிலோவுக்கும் அதிகமான எடை பிரிவுகளிலும், சீனியர் பிரிவில், 46, 49, 53, 57, 62, 67, 73 கிலோ மற்றும், 73 கிலோவுக்கும் அதிகமான எடை பிரிவுகளிலும் போட்டி நடந்தது.
கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த, 120 வீராங்கனைகள் பங்கேற்றனர். மொத்தம், 18 பிரிவுகளில் தலா தங்கம், வெள்ளி, வெண்கலம்-1, வெண்கலம்-2 என நான்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு, தமிழ்நாடு டேக்வாண்டோ சங்க பொதுச்செயலாளர் செல்வமணி, மாவட்ட பொது செயலாளர் சிஜூகுமார் உள்ளிட்டோர் பரிசுகள் வழங்கினர். சேலத்திலும் வரும், 16ம் தேதி இப்போட்டி நடக்கிறது.
தமிழகத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் மாணவியர் மட்டுமே பங்கேற்க முடியும். பங்கேற்க விரும்புவோர், கேலோ இந்தியாவின், https://sfw.kheloindia.gov.in/public/index.php என்ற இணையதளத்தில், பதிவு செய்ய வேண்டும்.
இதன் வாயிலாக உருவாக்கப்படும் ஐ.டி.,யை கொண்டு, https://account.kheloindia.gov.in/#/login?appId=2XtqKhTfVq என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இத்துடன், https://forms.gle/LGsL7wHvWCwJJnQx5 என்ற இணையதளத்தில் பதிவு செய்வதும் அவசியம். எனவே, மாணவியர், பெண்கள் உடனடியாக பதிவு செய்யுமாறு, தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கம் தெரிவித்துள்ளது.