ADDED : மே 29, 2026 04:10 PM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் விழாவில், கடந்த 28ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று காலை 6:00 மணிக்கு, நரசிம்மநாயக்கன்பாளையம் வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து எல்லப்பாளையம் வீரகுமாரர்களின் சக்தி அழைத்தல், ஆலாங்கொம்பு வீரகுமாரர்களின் கத்தி போடும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தன. மாலை, 4:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் நடந்தது; திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
