ADDED : ஏப் 24, 2024 10:34 PM

அ நிறம் | அளவு
உடுமலை : அருள் தரும் அன்னையான உடுமலை மாரியம்மனுக்கு, தேவாங்க சமூக மக்கள், ஆண்டுதோறும் கத்தி போடும் ஊர்வலம் நடத்தி, வழிபாடு செய்கின்றனர்.
நகரில் ஆதிசக்தியாக அருள்பாலிக்கும் மாரியம்மனுக்கு, நோன்பு சாட்டியதும், அனைத்து சமுதாயத்தினரும், கோவிலுக்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம். அவ்வகையில், தேவாங்க சமூக மக்கள், மாரியம்மனுக்கு 'கத்தி போட்டு' தங்கள் மரியாதையை செலுத்தி வழிபாடு நடத்தினர்.
பூமாலை சந்திலுள்ள, சவுண்டம்மன் கோவிலில் இருந்து, தீர்த்தக்குடம், திருமஞ்சனம், சக்தி குடம் ஆகியவற்றுடன் ஊர்வலம் துவங்கியது.
சதாசிவம் பிள்ளை வீதி, வ.உ.சி., வீதி, தளி ரோடு, பெரியகடை வீதி வழியாக ஊர்வலமாக சென்ற மக்கள், தங்கள் உடலில் கத்தி போட்டபடி கோவிலுக்குச்சென்றனர். பின்னர், கோவிலில் வழிபாடு செய்து திரும்பினர்.
