/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செயற்கை நுண்ணறிவு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்: முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி "அட்வைஸ்"

ADDED : ஜூலை 27, 2024 04:34 PM

கிணத்துக்கடவு: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், அமெரிக்கா இந்தியன் பவுண்டேசன் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் மற்றும் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது: டாக்டர் அப்துல்கலாம் நினைவு நாளில், நான் படித்த பள்ளியில் வந்து இப்படி ஒரு ஆய்வு கூடத்தை திறப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 30 வருடமாக விண்வெளிக்காக உழைத்தேன். ஆனால் கடந்த 6 வருடமாக விவசாயத்திற்காக உழைத்து வருகிறேன்.
மாணவர்கள் அனைவரும் செயற்கை நுண்ணறிவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஏர் முனை முதல் போர் முனை வரை அனைத்து துறையிலும் நமது மூளைகள் சேவை செய்ய வேண்டும். எதை கற்கிறோம் என்பதை விட எப்படி கற்கிறோம் என்பதே முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.