/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான் பாயும் புலி தெரிஞ்சுக்கோங்க... நான் விழ மாட்டேன் புரிஞ்சுக்கோங்க! அ.தி.மு.க.,-பா.ஜ., போஸ்டர் யுத்தம்

ADDED : ஜூன் 18, 2024 01:54 AM

கோவை;கோவையில் பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., இடையே, போஸ்டர் யுத்தம் வெடித்துள்ளது. இரு தரப்பினரும் மற்றொரு தரப்புக்கு பதிலடியாக, போஸ்டர்களை ஒட்டி வருவது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி முறிந்த பிறகு, இரு தரப்பினருக்கும் இடையே, வார்த்தை மோதல் முற்றி வருகிறது.
லோக்சபா தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க., என்ற கட்சியே இருக்காது என, அண்ணாமலை பேசியிருந்தார். கோவையில் பா.ஜ., ஒரு கட்சியே இல்லை. அ.தி.மு.க.,வுக்கும் தி.மு.க.,வுக்கும்தான் போட்டி என வேலுமணி பேசியிருந்தார். இப்படி, அடுத்தடுத்து இரு தரப்பினரும், கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். தேர்தல் முடிவுக்குப் பின், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் வேலுமணி, 'அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி முறிவுக்கு, அண்ணாமலையே காரணம். கூட்டணி முறியாமல் இருந்து இருந்தால், 35 இடங்கள் வரை வெற்றி பெற்றிருக்கலாம்' என்றார்.
'இது அ.தி.மு.க.,வின் கருத்தல்ல; வேலுமணியின் சொந்தக் கருத்து' என, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். இதற்குப் பதிலடியாக, எடப்பாடி பழனிசாமிக்கும், வேலுமணிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளதாக, அண்ணாமலை பேட்டியளித்தார்.
கோவை அ.தி.மு.க.,வினர் இதற்குப் பதில் சொல்லும் விதமாக, வேலுமணி, இ.பி.எஸ்., இருவரின் படத்துடன், 'வெற்றிக்காக விரைவில் வேலுமணி புலி பாயும்' என, பல்வேறு இடங்களிலும் போஸ்டர் ஒட்டினர். இது, சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், பா.ஜ.,வினர், 'நான் வீழ்வேன் என நினைத்தாயோ' என்றபாரதியாரின் பாடல் வரிகளை மேற்கோள் காண்பித்து, அண்ணாமலை படத்துடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
இரு கட்சியினரும் மாறி, மாறி போஸ்டர் யுத்தத்தில் ஈடுபட்டிருப்பது, கோவை அரசியல் வட்டாரத்தில், பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.