/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடு கட்டும் முன் வரைபடத்தின் முக்கியத்துவம் தெரிஞ்சுக்கோங்க!
/
வீடு கட்டும் முன் வரைபடத்தின் முக்கியத்துவம் தெரிஞ்சுக்கோங்க!
வீடு கட்டும் முன் வரைபடத்தின் முக்கியத்துவம் தெரிஞ்சுக்கோங்க!
வீடு கட்டும் முன் வரைபடத்தின் முக்கியத்துவம் தெரிஞ்சுக்கோங்க!
ADDED : ஜூன் 22, 2024 12:30 AM

வீடு கட்டும் போது, வரைபடம் எந்தளவுக்கு அவசியம் என்பது குறித்து விளக்குகிறார், கோயமுத்துார் மாவட்ட அனைத்து கட்டுமானப் பொறியாளர்கள் சங்க (காட்சியா) பொறியாளர் ஜெகதீஸ்வரன்.
அவர் கூறியதாவது:
உங்கள் கனவு இல்லம் அமையும் இடத்தில் மண் பரிசோதனை செய்து, அதன் பின் திட்ட வரைபடத்தில் உள்ளவாறு தரைதளம், முதல் தளம் அல்லது கூடுதல் தளங்கள் அமைக்கலாம்.
அதற்கு ஏற்றவாறு புட்டிங் அமைப்பதற்கான நீளம், அகலம், உயரம், காலம் போஸ்டின் நீளம் அகலம் அதற்கான கம்பிகள், பீம், சன்சேடு, லாப்ட் மற்றும் ரூப் சிலாப் இவற்றிற்கான உயரம் மற்றும் கனம், இவற்றிற்கான கம்பிகள் கட்டுவதற்கான வரைபடங்கள் மற்றும்கம்பியின் அளவு, கிரேடு, கான்கிரீட்டின் கிரேடு ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும்.
இதனால் உங்கள் கட்டடத்திற்கு தேவையான உறுதியும் ஆயுளும் கூடும். கம்பி மற்றும் சிமென்ட் விரயமாவதை தவிர்க்கலாம். எனவே, ஸ்ட்ரச்சுரல் வரைபடம் இன்றியமையாதது. இதை தயார் செய்து அதன்படி பணியை தொடரவும்.
எலக்ட்ரிக்கல் டிராயிங்
ஒவ்வொரு அறைக்கும் அதன் பயன்பாடு, அறையின் நீளம் மற்றும் அகலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு அறைக்கும் தேவையான மின்விசிறி, மின்விளக்கு, ஏ.சி, டி.வி., மற்றும் தேவையான பிளக் பாயின்ட்கள், சீலிங்கில் என்னென்ன பாயின்டுகள் எவ்வளவு இடைவெளியில் அமைப்பது மற்றும் சுவரில் அமையும் பாயின்டுகள் எவ்வளவு, அவற்றை எந்த இடத்தில் எவ்வளவு உயரத்தில் அமைப்பது ஆகியவை, இதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் டிராயிங்
வீட்டின் உட்பகுதியில் ஹாலில் டிவி ஷோகேஸ், சோபா மற்றும் பால்சீலிங், பெட்ரூமில் கப்போர்டு, வார்டுரோப், மாடுலர் கிச்சன் ஆகியவற்றை அமைக்கவும், கட்டடத்தின் வெளிப்புறம் எலிவேஷன் அமைக்கவும், இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் டிராயிங் அவசியம்.
இவ்வாறு, அவர் கூறினார்.