sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஓட்டுப்பதிவுக்கு முன் இதையும் தெரிஞ்சுக்கங்க...!

/

ஓட்டுப்பதிவுக்கு முன் இதையும் தெரிஞ்சுக்கங்க...!

ஓட்டுப்பதிவுக்கு முன் இதையும் தெரிஞ்சுக்கங்க...!

ஓட்டுப்பதிவுக்கு முன் இதையும் தெரிஞ்சுக்கங்க...!


ADDED : ஏப் 15, 2024 10:56 PM

Google News

ADDED : ஏப் 15, 2024 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வரும் வெள்ளிக்கிழமை, தமிழகத்தில் ஜனநாயக திருவிழா. வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் ஓட்டுப்பதிவு செய்தால் மட்டுமே, தேர்தல் ஆணையத்தின் 100 சதவீத ஓட்டுப்பதிவுக்கான முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். வாக்காளர்கள் தான் எஜமானர்கள். தேர்தலில் ஓட்டுப்பதிவு எவ்வளவு முக்கியமோ, அதே போல், தேர்தல் நடத்தை விதிகளையும் அறிந்து கொள்வது அவசியம்.

அதில் முக்கியமானவை:

49 (O): இந்தியாவின் தேர்தல்களை நடத்தும் நெறிமுறைகளைக் கொண்ட தேர்தல் நடத்தை விதிகள், 1961[1] கீழ் அமைந்துள்ள ஓர் விதியாகும். வாக்காளருக்கு கையில் மை வைத்த பின், மனம் மாறி வாக்களிக்க விருப்பம் இல்லை என கூறுவது. இதற்கு பின், தேர்தல் பட்டியல் எண் படிவம்- (17A) வாக்காளர் பதிவேட்டில் பதியப்பட்ட பின், உரிய இடத்தில், ஓட்டுச்சாவடி அதிகாரி மற்றும் வாக்காளர் இருவரும் கையெழுத்திட வேண்டும்.

49 (M): ஓட்டுச்சாவடிக்குள் வாக்காளர் வரும் போது, தான் எந்த சின்னத்துக்கு ஓட்டுப்பதிவு செய்யப் போகிறேன் என்று, சைகை வாயிலாகவோ, வாய்மொழி வாயிலாகவோ தெரிவிக்கக் கூடாது; அவர் செலுத்தக் கூடிய ஓட்டு மிகவும் ரகசியம் காக்க வேண்டும். அப்படி தெரியப்படுத்தினால், அவரை, இந்த விதியின் கீழ் ஓட்டுப்பதிவு செய்ய அனுமதிக்க மாட்டார்கள்.

49 (MA): ஒரு வாக்காளர், எந்த சின்னத்துக்கு ஓட்டுப்பதிவு செய்தாரோ, அந்த சின்னம் தெரியாமல் 'விவி பேட்'ல் வேறு சின்னம் தெரிவதாக கூறுகிறார் என்றால், இவருக்கு அடுத்ததாக உள்ள ஒருவரை ஓட்டுப்பதிவு செய்யச் சொல்லி சரி பார்ப்பது. இவரும் அதே புகார் கூறினால், ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டு, ஓட்டுப்பதிவு இயந்திரம் மாற்றப்படும். புகார் தவறு எனில், அந்த வாக்காளரை காவல் துறையிடம் ஒப்படைப்பர்.

49 (N-): பார்வை குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளி வாக்காளருடன், 18 வயது நிரம்பிய உதவியாளரை அழைத்து வரலாம். உதவியாளரிடம் 14A படிவத்தில் பதிவு செய்து ரகசியம் காப்பதாகவும், வேறு யாருக்கும் உதவியாளராக இல்லை எனவும் உறுதிமொழியில் கையெழுத்து வாங்கி, அவரது வலது கை ஆள்காட்டி விரலில் மை வைப்பர். பார்வை குறைபாடு இல்லாத மற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவியாளர் அனுமதியில்லை.






      Dinamalar
      Follow us