/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவுமார மடாலயத்தில் கோடி அர்ச்சனை
/
கவுமார மடாலயத்தில் கோடி அர்ச்சனை
ADDED : ஆக 10, 2024 10:35 PM

கோவை;கோவை கவுமார மடாலயத்தில் கோடி அர்ச்சனை பெருவிழா, ராமானந்த குமரகுருபர சாமிகளின் நாண்மங்கள விழா நடந்தது.
சின்னவேடம்பட்டியில் உள்ள கவுமார மடாலயத்தில், தண்டபாணிக் கடவுள் திருக்கோவிலில், கோடி அர்ச்சனை பெருவிழா, சண்முகார்ச்சனை, பேரொளி வழிபாடு, அன்னம்பாலிப்பு, அன்னதான நிகழ்ச்சிகள் நடந்தன.
நாண்மங்கல விழாவில், கோவை சிரவை ஆதினம் குமரகுரு சாமிகள் பேசியதாவது:
சான்றோர்களை உருவாக்கிய கோவை மடங்கள், சைவ நன்னெறிகளை பின்பற்றி வந்துள்ளன. அவிநாசி, திருச்சங்கோடு, திருப்பெருந்துறை, திருமுருகன்பூண்டி உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் பழம்பெரும் கோவில்கள் உருவாகியுள்ளன.
தெய்வப்பணியோடு கல்விப்பணியையும் இவர்கள் மேற்கொண்டிருந்தனர். இவற்றோடு இலக்கிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஓலைச்சுவடிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட நுால்களை அச்சுக்கு கொண்டு வந்திருக்கிறோம்.
'தாமரை பிரதர்ஸ்' நிறுவனம், இப்பணியை செய்து வருகிறது. எல்லோரும் இணைந்து, சமுதாயத்தில் நலிவடைந்த மக்களுக்கு, மருத்துவம், கல்வி உள்ளிட்ட பணிகளையும், முருகன் கோவில்களை புதுப்பிக்கவும், ஒரு அறக்கட்டளை ஏற்படுத்த யோசித்து வருகிறோம். ஒவ்வொருவரும் மாதம் நுாறு ருபாய் நன்கொடை அளித்தால், இதை உருவாக்கி விட முடியும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், செஞ்சேரிமலை முத்துசிவராமசாமி அடிகள், பழனி சாதுஅடிகள், முன்னாள் கல்லுாரி கல்வி இயக்குனர் குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
---------

