ADDED : மே 10, 2024 02:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோவை சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் (கொசினா) பொறியாளர்கள் மாதாந்திர கூட்டம், கோவை ரேடிசன் ப்ளூ ஓட்டலில் நடந்தது.
கொசினா தலைவர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, பொதுப்பணித்துறையின் முன்னாள் கண்காணிப்பு பொறியாளர் கல்யாண சுந்தரம், பொறியாளர்கள் தங்கள் பணியை மேம்படுத்துவது குறித்தும், எளிய முறையில் தவறுகளை கண்டறிவது குறித்தும், செயல்விளக்கங்களுடன் அறிவுறுத்தினார்.
கொசினா ஆரம்பித்து 18 வருடங்கள் கழிந்த நிலையில், ஐந்தாவது முறையாக, பொறியாளர்களின் தொழில்நுட்பம் மற்றும் கட்டுமான பொருட்கள் விற்பனையகம் விபரக் கையேடு வெளியிடுவதற்கான சிற்றேடு வெளியிடப்பட்டது.
கொசினா முன்னாள் தலைவர் கணேஷ், நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேற்கொண்டார். செயலாளர் சேகர் நன்றி கூறினார். 450க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் பங்கேற்றனர்.