/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.பி.ஆர்., கல்லுாரி விளையாட்டு தின விழா
/
கே.பி.ஆர்., கல்லுாரி விளையாட்டு தின விழா
ADDED : மே 09, 2024 04:36 AM
கோவை, : கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரியின் ஆண்டு விளையாட்டு விழாவை முன்னிட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
கே.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரியின் உடற்கல்வித்துறை இயக்குனர் முனியசாமி வரவேற்றார். தமிழரசி ஆண்டு அறிக்கையை வாசித்தார். முதல்வர் கீதா வாழ்த்துரை வழங்கினார். விழாவுக்கு பாரதியார் பல்கலையின் முன்னாள் பதிவாளர் (பொ) முருகவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
விளையாட்டு விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், மாணவர் பிரிவில் துரோஜன்ஸ் அணி 77 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றது. இரண்டாம் இடத்தை ஏதன்ஸ் அணி பெற்றது.
மாணவியர் பிரிவில் ஏதன்ஸ் அணி 101 புள்ளிகள் எடுத்து முதலிடத்தையும், டைடன்ஸ் அணி 68 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தையும் பிடித்தன. தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டத்தை மனோஜ் குமார், ஜெனிஷா ஆகியோர் பெற்றனர். மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கினர்.