/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனன்யாஸ் நானா நானி ஹோமில் கிருஷ்ண ஜெயந்தி விழா
/
அனன்யாஸ் நானா நானி ஹோமில் கிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED : ஆக 29, 2024 10:38 PM

தொண்டாமுத்துார்: அனன்யாஸ் நானா நானி ஹோம்ஸ் சார்பில், கிருஷ்ண ஜெயந்தி விழா, தாளியூரில் உள்ள நானா நானி ஹோம்ஸ் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ராதாகிருஷ்ணா கோவிலில் நேற்று நடந்தது. காலை, சுப்ரபாதம் மற்றும் விஸ்வரூப தரிசனம் நடந்தது. தொடர்ந்து, ராதாகிருஷ்ணா காயத்ரி மந்திர ஹோமம், பூர்ணாஹூதி, மஹா திருமஞ்சனம், கிருஷ்ணர் சகஸ்ரநாமம் நடந்தது.
அதன்பின், குடியிருப்புவாசிகள் சீர்த்தட்டு எடுத்து வந்தனர். மாலையில், தங்கத்தேர் வடம் பிடித்தல் நடந்தது. ராதையுடன் கிருஷ்ணர் வீற்றிருந்த தங்கத் தேரை பக்தர்கள் வடம் பிடித்து, வளாகத்தை சுற்றி இழுத்து வந்தனர். இதில், அனன்யாஸ் நானா நானியின் இணை நிர்வாக இயக்குனர் உமா மகேஸ்வரி மற்றும் சீனியர் சிட்டிசன்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.