/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேட்டுப்பாளையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா
/
மேட்டுப்பாளையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED : ஆக 27, 2024 02:39 AM

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா, பொதுமக்கள் சார்பில் கொண்டாடப்பட்டது.
மேட்டுப்பாளையம் மேதக்காரர் வீதியில், கிருஷ்ணர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மாலை, 5:45 மணிக்கு பொதுமக்கள் சார்பில் கிருஷ்ணர் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது.
கோவிலில் இருந்து சுவாமி ஊர்வலம் துவங்கியது. இந்த ஊர்வலத்தின் முன்பாக சிறுவர், சிறுமியர், கிருஷ்ணர், ராதை வேடமிட்டு வந்தனர். முன்னதாக ஊர்வலத்தில் பஜனை குழுவினர் கோலாட்டம், கும்மியாட்டம் அடித்தும், ஆடியும் வந்தனர்.
கோவிலில் இருந்து துவங்கிய இந்த ஊர்வலம் பழைய கிராம நிர்வாக அலுவலகம் வீதி, பெரிய பள்ளிவாசல் வீதி, செந்தில் தியேட்டர் வீதி, ஊட்டி சாலை, மேதர் பிள்ளையார் கோவில் வீதி வழியாக மீண்டும் கோவிலை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.