ADDED : ஜூலை 31, 2026 04:50 PM
அ நிறம் | அளவு
கோவை: கே.எஸ்.ஆர். பெங்களூரு ரயில்வே பணிமனையில் நடக்கும் பொறியியல் பணிகளால், கோவை வழி ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, யஸ்வந்த்பூர்–மங்களூரு இடையேயான வாரந்திர எக்ஸ்பிரஸ் ரயில்(15565/66) சேவை ஆக., 2, 3ம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை–கே.எஸ்.ஆர்.பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரயில்(22666) 1, 2, 3ம் தேதிகளில் கிருஷ்ணராஜபுரம் முதல் கே.எஸ்.ஆர். பெங்களூரு வரை பகுதி நேரம் ரத்து செய்யப்பட்டு, எஸ்.எம்.வி.டி. பெங்களூரு வழியாக மாற்றி இயக்கப்படுகிறது.
கோவை–லோக்மான்ய திலக் டெர்மினஸ் எக்ஸ்பிரஸ் ரயில்(11014) 1, 2, 3ம் தேதிகளில் யளஹங்கா, ஓசூர் வழியாக மாற்றி இயக்கப்படும் என, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
