/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆசிரியர் செம்மல் விருது பெற்றவருக்கு பாராட்டு
/
ஆசிரியர் செம்மல் விருது பெற்றவருக்கு பாராட்டு
ADDED : செப் 08, 2024 10:40 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா, பள்ளி பள்ளி வளாகத்தில் நடந்தது.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில், தமிழக கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ஆசிரியர் செம்மல் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், 100 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
ஆனைமலை வி.ஆர்.டி., அரசு பள்ளி கணினி ஆசிரியர் ஜெயக்குமாருக்கு, ஆசிரியர் செம்மல் விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா, வி.ஆர்.டி., பள்ளி வளாகத்தில் நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் சுமதி தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் விமலாதேவி வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று, ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்தனர்.