ADDED : செப் 15, 2024 01:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்: சின்னியம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த, தம்பதி கிருஷ்ணராஜ் - சுகந்தி மகன் மிதிலன், கண்ணன் சுகந்தி தம்பதி மகள் தாரணி, கனகராஜ் - புஷ்பலதா தம்பதியின் மகன் தருனேஷ் ஆகிய மூவரும், நீட் தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவக்கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனர்.
முதல் தலைமுறை மருத்துவ மாணவர்களான அவர்களுக்கு, சின்னியம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. ஊராட்சி தலைவர் ராஜலட்சுமி, முன்னாள் தலைவர் தேவராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், மாணவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினர். பள்ளி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், துவக்க பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.