/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சக்தி விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
/
சக்தி விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
ADDED : மே 17, 2024 11:28 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி - உடுமலை ரோடு, சக்தி விநாயகர் கோவிலில், கும்பாபிேஷக விழா நாளை நடக்கிறது.
பொள்ளாச்சி - உடுமலை ரோடு சக்தி நகரில் அருள்பாலிக்கும், சக்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா நேற்று காலை, 7:30 மணிக்கு கணபதி ேஹாமம், மகாலட்சுமி ேஹாமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நவக்கிரக ேஹாமம்,கிராம சாந்தி மற்றும் பூர்ணாஹுதி பூஜைகள் நடைபெற்றன.
மாலை, 4:30 மணிக்கு முதல் கால யாக பூஜை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
இன்று காலை, 8:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, சக்தி கணபதிக்கு மூல மந்திர ஜப ஹோமம், பூர்ணாஹுதி, சதுர்வேத பாராயணம் உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன. மாலை, 5:00 மணிக்கு மூன்றாம் கால யாகம் உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன. இரவு, 9:00 மணிக்கு மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை (19ம் தேதி) காலை, 6:00 மணிக்கு வேதிகா பூஜை, யாக வேள்வி, நாடி சந்தானம், பூர்ணாஹுதி, காலை, 9:00 மணிக்கு கடம் புறப்பாடு, 9:15 மணிக்கு விமான கும்பாபிேஷகம், 9:30 மணிக்கு சக்தி விநாயகர் மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிேஷகம், கலசாபிேஷகம் நடக்கிறது.
காலை, 10:30 மணிக்கு மகா அபிேஷகம், காலை, 11:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை சக்தி விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், தச தரிசனம், தச தானம் நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

