/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
/
கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : மார் 11, 2025 11:26 PM

பெ.நா.பாளையம்; துடியலுார் அருகே பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள பழமை வாய்ந்த கற்பக விநாயகர், மாகாளியம்மன், நாகாளம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தது.
கற்பக விநாயகருக்கு புதிய கோவிலும், மாகாளியம்மன் கோவில் வளாகத்தில் புதிதாக பால விநாயகர், பாலமுருகன், நாகசக்தி விநாயகர் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது.
கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், குபேர ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. கோவிலில் இருந்து காவேரி தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக மாகாளியம்மன் கோவில் வந்தடைதல் நிகழ்ச்சி நடந்தது. யாக பூஜைகள் விமர்சையாக நடந்தன. தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனித நீர் அடங்கிய குடங்கள் கோவில் விமான கோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து கற்பக விநாயகர், மாகாளியம்மன், நாகாளம்மன் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அபிஷேக ஆராதனை, அலங்கார பூஜைகள் நடந்தன.
பூஜைகளை லலிதாம்பிகை பீடம் சுவாமி ஜெகதாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள் நடத்தி வைத்தார். ஏற்பாடுகளை நஞ்சுண்டாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் சுந்தரராஜ் தலைமையில் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.