/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கருப்பராயன், கன்னிமார் கோவில் கும்பாபிஷேகம்
/
கருப்பராயன், கன்னிமார் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : மே 31, 2024 10:40 PM
அன்னுார்;அன்னுார் அருகே திருப்பணிகள் நடந்த துண்டுதடி கருப்பராயன் கன்னிமார் சுவாமி கோவில் கும்பாபிஷேகம், 3ம் தேதி நடக்க உள்ளது.
அன்னுார் அருகே காட்டம்பட்டி முதலிபாளையம், கடத்துார் குளக்கரையில் துண்டுதடி கருப்பராயன் மற்றும் கன்னிமார் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டன. கும்பாபிஷேக விழா ஜூன் 2ம் தேதி மஹா கணபதி, லட்சுமி ஹோமத்துடன் துவங்குகிறது.
மாலை, 5:00 மணிக்கு முளைப்பாளிகையை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்து, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், வாஸ்து சாந்தி ஆகிய பூஜைகள் நடக்க உள்ளன. அதைத் தொடர்ந்து இரவு, முதல் கால யாக வேள்வி பூஜை துவங்குகிறது. அதன்பின் அஷ்டபந்தன பிரதிஷ்டை செய்கின்றனர்.
மூன்றாம் தேதி காலை, 5:00 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி பூஜை முடிந்த பின், யாகசாலையில் இருந்து, காலை, 6:00 மணிக்கு தீர்த்த கலசங்கள், கோவிலை சுற்றி எடுத்து வந்து, துண்டுதடி கருப்பராயன் மற்றும் கன்னிமார் சுவாமிக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

