/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குன்னத்துார் பழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம்
/
குன்னத்துார் பழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஆக 24, 2024 11:17 PM
அன்னூர்:குன்னத்துாரில், பிரசித்தி பெற்ற பழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம், நேற்றுமுன்தினம் நடந்தது. மடாதிபதிகள் பங்கேற்றனர்.
குன்னத்தூரில் உள்ள பழமையான பழநி ஆண்டவர் கோவிலில், பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேக விழா கடந்த 21ம் தேதி துவங்கியது. திருவிளக்கு வழிபாடு நடந்தது.
22ம் தேதி விமான கலசங்கள் நிறுவுதலும், மாலையில் மூலமூர்த்திகளை ஆதார பீடத்தில் வைத்து, எண் வகை மருந்து சாத்துதலும் நடந்தது. இரவு ஆதிமுருகன் வள்ளி கும்மியாட்டம் நடந்தது.
நேற்றுமுன்தினம் காலை 7:20 மணிக்கு, சிரவை ஆதினம் குமரகுருபர சாமிகள், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் ஆகியோர் விமான கலசங்களுக்கும், மூலமூர்த்திகளுக்கும், புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்தனர்.
அலங்கார பூஜை, பேரொளி வழிபாடு நடந்தது. அச்சம்பாளையம் சண்முகம் குழுவின் பஜனை நடந்தது. பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.