/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 13, 2024 07:37 AM
போத்தனூர்: பிள்ளையார்புரத்திலுள்ள முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
சுந்தராபுரம் அடுத்து பிள்ளையார்புரத்தில் முத்துமாரியம்மன் கோவில், விநாயகர், கன்னிமார், கருப்பராயன், நவகிரகங்கள், துர்க்கை அம்மன், மகேஸ்வரி, லஷ்மி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் மாலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து வாஸ்து சாந்தி, நவகிரக ஹோமம், முதல் கால யாக வேள்வி நடந்தன.
நேற்று காலை குபேர லட்சுமி பூஜை, இரண்டாம் கால யாக வேள்வி, நாடி சந்தானம், திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, ஆசீர்வாதம், மகா தீபாராதனை நடந்தது.
இதையடுத்து கடம் புறப்பாடு, முத்துமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகத்தை, விக்னேஸ்வர் சுவாமி, வசந்தகுமார் சாஸ்திரி, ராஜ்குமார் சுவாமி உள்ளிட்டோர் நடத்தி வைத்தனர்.
தொடர்ந்து மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தன. திரளானோர் பங்கேற்றனர்.

