/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொன் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
பொன் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : செப் 09, 2024 09:48 AM

கருமத்தம்பட்டி: கணியூர் பொன் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
கணியூர் ஊராட்சி கொள்ளுப் பாளையத்தில் உள்ள பொன் காளியம்மன், அண்ணமார் சுவாமி கோவில் பழமையானது. இங்கு விமானம் அமைத்து வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்தன.
கடந்த, 6 ம் தேதி காலை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.
நான்கு கால பூஜைகள், பூர்ணாகுதி நடந்தது. நேற்று முன்தினம் விக்ரகங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்தப்பட்டது.
நேற்று காலை, 5:00 மணிக்கு, நான்காம் கால ஹோமம், திரவியாகுதி, பூர்ணாகுதி முடிந்து, புனித நீர் கலசங்கள் கோவிலை சுற்றி மேள,தாளத்துடன் எடுத்து வரப்பட்டன.
சிவகிரி ஆதீன குரு பீடாதிபதி பாலமுருகன் ஈசான சிவ சமய பண்டித குரு சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் பொன் காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.