/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சீதாராம ஆஞ்சநேய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்
/
சீதாராம ஆஞ்சநேய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED : மே 02, 2024 11:26 PM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியிலுள்ள, சீதாராம ஆஞ்சநேய சுவாமி கோவிலில், இன்று (3ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது.
கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியில், சீதாராம ஆஞ்சநேய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில், கும்பாபிஷேக நிகழ்ச்சி நேற்று, மங்கள இசையுடன் துவங்கியது.
தொடர்ந்து, கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், வாஸ்து பூஜை, கலச ஸ்தாபனம், அக்னி பிரவேசம் நடந்தது. தொடர்ந்து மாலை, மருந்து சாத்துதல், சயநாதி வாசம், பாராயணங்கள் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது.
இன்று, 3ம் தேதி, காலை 6:30 மணிக்கு, கும்பாபிஷேக ஹோமங்கள் மற்றும் வைபவங்கள் நடக்கிறது. காலை 9:00 மணிக்கு, கும்பாபிஷேக வைபவம், பஞ்சாமிர்த அபிஷேகம், சுவாமி அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.