/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சென்றாயப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்
/
சென்றாயப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED : ஆக 01, 2024 10:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, சென்றாம்பாளையம், சென்றாயப் பெருமாள் கோவிலில், கும்பாபிஷேக விழா, கடந்த, 30ம் தேதி துவங்கியது. கணபதி பூஜை, நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சுவாமி பிரதிஷ்டை நடந்தது.
கடந்த, 31ம் தேதி, காலை, தீர்த்த பூஜை, ஜோதி பூஜை, சுவாமிகளுக்கு மகா வேள்வி நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது.
பிம்பசுத்தி, காப்பு கட்டுதல், நாடிசந்தானம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு, அபிஷேகம், தசதரிசனம் மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியுடன் கும்பாபிஷேகம் நிறைவடைந்தது.