/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறிச்சி அரவான் திருவிழா நவ., 12ல் துவக்க முடிவு
/
குறிச்சி அரவான் திருவிழா நவ., 12ல் துவக்க முடிவு
ADDED : ஆக 01, 2024 01:16 AM
போத்தனூர் : குறிச்சி அரவான் திருவிழாவை நவ.,12ல் துவக்க அனைத்து சமுதாய ஒருங்கிணைந்த பெரியதனக்காரர்கள் கூட்டமைப்பு சார்பில், முடிவு செய்யப்பட்டது.
குறிச்சி கிராம அரவான் திருவிழா, அனைத்து சமுதாயத்தினரின் ஒற்றுமைக்கான விழாவாக நடத்தப்படுகிறது. கடந்தாண்டு இத்திருவிழா நடத்த சில சமூக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மதுக்கரை தாலுகா தாசில்தார் தலைமையில் நடந்த கூட்டத்திலும் சமரசம் ஏற்படாததால், திருவிழா நடக்கவில்லை. இந்நிலையில், முருகா நகரை சேர்ந்த வடிவேல் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிபதி திருவிழா நடத்தவும், போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து அனைத்து சமுதாய ஒருங்கிணைந்த பெரியதனக்காரர்கள் கட்டமைப்பு சார்பில், திருவிழாவின் ஆரம்ப கால பூஜை குறித்த கூட்டம், குறிச்சி குண்டத்து மாகாளியம்மன் கோவிலில், வடிவேல், வசந்தன், கருணாகரன், கதிர்வேல், பாலமுருகேசன் உள்ளிட்டோர் முன்னி லையில் நடந்தது. இதில், நவ., மாதம், 12ல் பூச்சாட்டுதல், கம்பம் நடுதலுடன் விழாவை துவக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் அரவானை தேடுதல், திருக்கல்யாணம், வீதி உலா ஆகியவை, 20, 21, 22 தேதிகளில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.