/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெயின்டரை கொன்ற கூலித்தொழிலாளி கைது
/
பெயின்டரை கொன்ற கூலித்தொழிலாளி கைது
ADDED : ஜூலை 24, 2024 12:44 AM

ஆனைமலை;ஆனைமலை அருகே, குடி போதையில் பெயின்டரை அரிவாளால் வெட்டி கொலை செய்த கூலித்தொழிலாளியை, ஆனைமலை போலீசார் கைது செய்தனர்.
ஆனைமலை அருகே, அம்பராம்பாளயைம் சுங்கம் - ஆத்துப்பொள்ளாச்சி ரோடு விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பசுபதி,26. இவர், நேற்று முன்தினம் அம்பராம்பாளையம் சுங்கத்தில் உள்ள பேக்கரியில் குடி போதையில் தகராறு செய்தார்.
அப்போது, டீ குடிக்க வந்த நபர்கள், பசுபதியை அடித்து விரட்டனர். வீட்டுக்கு சென்ற பசுபதி, இரவு, 11:00 மணிக்கு பின், அரிவாளுடன் வந்து, தகராறு செய்தார்.
அவ்வழியாக பெயின்டிங் வேலைக்கு சென்று திரும்பிய, ஆத்துப்பொள்ளாச்சி எம்.ஜி.ஆர்., காலனியை சேர்ந்த கிருஷ்ணன்,40, என்பவரை, பசுபதி அரிவாளால் வெட்டினார். அதில், சம்பவ இடத்திலேயே கிருஷ்ணன் இறந்தார். இதுகுறித்து, ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பசுபதியை கைது செய்தனர்.

