/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு வேலை வாங்கித்தருவதாக 39 லட்சம் ரூபாய் மோசடி
/
அரசு வேலை வாங்கித்தருவதாக 39 லட்சம் ரூபாய் மோசடி
ADDED : டிச 31, 2024 04:59 AM
கோவை : கோவை, சாய்பாபா காலனி கே.கே.புதுாரை சேர்ந்தவர் சரஸ்வதி ஜெகன், 51. மூன்று ஆண்டுகளுக்கு முன், கே.கே.புதுார் கிருஷ்ணா நகரில் குடியிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த குப்புராஜ் என்பவர் அறிமுகமானார்.
குப்புராஜ், அரசு துறையில் உயர் பதவியில் உள்ள பலருடன், தனக்கு நன்கு பழக்கம் இருப்பதாகவும், அவர்கள் வாயிலாக சரஸ்வதி ஜெகனின் மகனுக்கு அரசு வேலை வாங்கித்தர முடியும் எனவும் தெரிவித்தார்.
இதை நம்பிய சரஸ்வதி ஜெகன், குப்புராஜிடம் 2021 முதல் 2022ம் ஆண்டு வரை பல்வேறு கட்டங்களாக, ரூ.39 லட்சம் கொடுத்தார். தனது மகனின் அசல் சான்றிதழ்களையும் கொடுத்தார். பணத்தை பெற்றுக் கொண்ட குப்புராஜ், வேலை வாங்கித்தரவில்லை.
பலமுறை கேட்ட பின்னரும், பணம், சான்றிதழ்களை திருப்பித்தரவில்லை. இது குறித்து கேட்டபோது, குப்புராஜ் மற்றும் அவரது உறவினர்கள் சாந்திமீனா, பாரதி ஆகியோர் மிரட்டல் விடுத்தனர். சரஸ்வதி ஜெகன் சாய்பாபா காலனி போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.