/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னையில் கருந்தலை புழு தாக்குதலை தடுக்க விளக்கு பொறி
/
தென்னையில் கருந்தலை புழு தாக்குதலை தடுக்க விளக்கு பொறி
தென்னையில் கருந்தலை புழு தாக்குதலை தடுக்க விளக்கு பொறி
தென்னையில் கருந்தலை புழு தாக்குதலை தடுக்க விளக்கு பொறி
ADDED : ஏப் 25, 2024 11:26 PM
சூலூர்;தென்னையில் கருந்தலை புழு தாக்குதலை, விளக்கு பொறி வைத்து அழிக்கலாம், என, தேட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
சூலூர் அடுத்த மோப்பிரிபாளையம் பகுதியில் தென்னை மரங்களில் கருத்தலை புழு தாக்குதல் அதிகரித்துள்ளது. அதிகரிக்கும் வெப்பம் காரணமாக, அருகில் உள்ள தோப்புகளுக்கும் பரவி வருகிறது. இதனால், விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,' தென்னை ஓலைகளை உணவாக உட்கொள்ளும் கருத்தலை புழுக்களை கட்டுப்படுத்த, பிரகானிட் ஒட்டுண்ணிகளை தோப்புகளில் விட வேண்டும்.
தாய் அந்து பூச்சியை அழிக்க, இரவு நேரத்தில் விளக்கு பொறி வைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தென்னை ஓலைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். தாக்குதல் அதிகமாக இருந்தாலும், தொழில்நுட்ப உதவிகளுக்கும் சூலூர் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.