/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிலக்கடலை விதைக்க நிலம் தயார்படுத்தலாம்
/
நிலக்கடலை விதைக்க நிலம் தயார்படுத்தலாம்
ADDED : ஜூலை 25, 2024 10:27 PM
பொள்ளாச்சி ; கோவை மாவட்டத்தில், வரும் ஐந்து நாட்களுக்கு, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று முதல், மூன்று நாட்களுக்கு லேசான துாறல் மழையும், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளில் பரவலான மழை பொழிவும் எதிர்பார்க்கப்படுவதாக, வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை, 30-31 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சம் 21-22 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். காலை நேர காற்றின் ஈரப்பதம், 80 சதவீதமாகவும், மாலை நேரம் 50 சதவீதமாகவும் இருக்கும். சராசரியாக காற்று மணிக்கு 18 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.
நடவு செய்து, 30 நாட்களான மக்காச்சோளப் பயிருக்கு, ஒரு ஏக்கருக்கு 125 கிலோ யூரியா மற்றும் 25 கிலோ பொட்டாஷை, களை எடுத்த பின் மேலுரமாக இடவேண்டும்.
அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்த, புளுபென்டஅமைடு 480 எஸ்.சி., 10 லிட்டருக்கு 4 மில்லி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
நிலவும் வானிலையை பயன்படுத்தி வரும் பருவத்தில், நிலக்கடலை விதைக்க ஏதுவாக நிலத்தை தயார்படுத்தலாம், என, அறிவிக்கப்பட்டுள்ளது.

