/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லதாங்கி வித்யா மந்திர் பள்ளி மாணவி சாதனை
/
லதாங்கி வித்யா மந்திர் பள்ளி மாணவி சாதனை
ADDED : மே 12, 2024 11:21 PM

பொள்ளாச்சி:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், பொள்ளாச்சி லதாங்கி வித்யா மந்திர் பள்ளி மாணவி விஷாலி, 500க்கு, 497 மதிப்பெண்கள் (தமிழ், 99, ஆங்கிலம், 99, கணிதம், 100, அறிவியல், 100, சமூக அறிவியல், 99) பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மாணவி சோனிகா, 494; நேத்ரா மற்றும் ஸ்ரீராம் ஆகியோர், 493 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.
இரண்டு மாணவர்கள், மூன்று பாடத்திலும்; 10 மாணவர்கள், இரண்டு பாடத்திலும்; 12 மாணவர்கள், ஒரு பாடத்திலும் சதம் அடித்தனர். 22 மாணவர்கள் கணித பாடத்திலும், 11 பேர் அறிவியல்; ஐந்து பேர் சமூக அறிவியல் பாடத்திலும் 'சென்டம்' பெற்றனர்.
சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை, பள்ளி செயலர் ரமேஷ் ராஜ்குமார், தாளாளர் சாந்திதேவி, நிர்வாக இயக்குனர் ஸ்ரீ ரிதன்யா, பள்ளி முதல்வர், கல்வி இயக்குனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பாராட்டினர்.