/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லதாங்கி வித்யா மந்திர் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 'சென்டம்'
/
லதாங்கி வித்யா மந்திர் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 'சென்டம்'
லதாங்கி வித்யா மந்திர் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 'சென்டம்'
லதாங்கி வித்யா மந்திர் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 'சென்டம்'
ADDED : மே 09, 2024 04:34 AM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, லதாங்கி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில், மாணவி லித்திகா - 590 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்திலும், ஹரிபிரியா - 588 இரண்டாம் இடமும், தர்ஷனா - 581 மூன்றாம் இடமும், தருணிகா ஸ்ரீ - 580 நான்காம் இடமும், ஆமினா ஜீல்பி - 579 ஐந்தாம் இடமும் பிடித்தனர்.
மேலும், 100 சதவீத மதிப்பெண்களுடன், 2 மாணவர்கள் 3 பாடத்திலும், 5 மாணவர்கள், 2 பாடத்திலும், 30 மாணவர்கள் ஒரு பாடத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
லதாங்கி பள்ளி தொடர்ந்து, 15 ஆண்டுகளாக பிளஸ் 2 தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி செயலர் ரமேஷ் ராஜ்குமார், தாளாளர் சாந்திேதவி, நிர்வாக இயக்குநர் ரிதன்யா மற்றும் பள்ளி முதல்வர், கல்வி இயக்குநர் ஒருங்கிணைப்பாளர் வாழ்த்து தெரிவித்தனர்.