/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மறைந்த முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்
/
மறைந்த முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்
ADDED : ஜூன் 04, 2024 12:00 AM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி பகுதியில், தி.மு.க., சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் நுாற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.குமரன் நகரில் நடந்த நிகழ்ச்சிக்கு, சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை வகித்தார். கருணாநிதியின் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. கட்சி கொடியை, நகராட்சி துணை தலைவர் கவுதமன் ஏற்றி வைத்தார்.
பொள்ளாச்சி நகர தி.மு.க., சார்பில் நடந்த பிறந்த நாள் விழாவில், முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் தலைமையில், நகர நிர்வாகிகள் பங்கேற்று, கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
* உடுமலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா நடந்தது. நகரக்கழகம் சார்பில், பஸ் ஸ்டாண்ட் அருகே, அவரது உருவப்படத்திற்கு, நகரச்செயலாளர் வேலுச்சாமி தலைமையில் அக்கட்சியினர் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில் தி.மு.க.,வினர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர்.
* கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப்பில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
*கோதவாடி ஊராட்சியில், கருணாநிதியின் உருவ படத்திற்கு அப்பகுதி மக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். சிங்கராம்பாளையத்தில் உள்ள குழந்தைகள் விடுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது.