/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலிவு விலையில் மருந்து விற்பனை துவக்கம்
/
மலிவு விலையில் மருந்து விற்பனை துவக்கம்
ADDED : பிப் 25, 2025 11:52 PM
அன்னுார்; தமிழக அரசின் கூட்டுறவுத் துறையும், தமிழ்நாடு மருத்துவ சேவை கழகமும் இணைந்து, தமிழகம் முழுவதும் ஆயிரம் முதல்வர் மருந்தகங்களை அமைத்துள்ளன. அன்னுார் கூட்டுறவு பண்டக சாலையில், முதல்வர் மருந்தகம் நேற்றுமுன்தினம் திறந்து வைக்கப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'இங்கு அலோபதி, சித்தா, ஆயுர்வேத மருந்துகள் விற்பனைக்கு உள்ளன. காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை 12 மணி நேரம் மருந்தகம் செயல்படும். ஜெனரிக் மருந்துகள், பிராண்டட் மருந்துகள் என அனைத்தும் இங்கு விற்பனை செய்யப்படும். சில மருந்துகளுக்கு அதிகபட்சம் 70 சதவீதம் வரை சந்தை விலையை விட குறைவாக உள்ளது. பொதுமக்கள் வாங்கி பயன் பெறலாம்,' என்றனர்.