/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வணிகர்களை பாதுகாக்க சட்டம் தேவை! வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்தல்
/
வணிகர்களை பாதுகாக்க சட்டம் தேவை! வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்தல்
வணிகர்களை பாதுகாக்க சட்டம் தேவை! வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்தல்
வணிகர்களை பாதுகாக்க சட்டம் தேவை! வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்தல்
ADDED : மார் 09, 2025 11:08 PM
பொள்ளாச்சி; 'சாமானிய வணிகர்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்பு பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும்,' என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில், மாநில தலைவர் தெரிவித்தார்.
பொள்ளாச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.
அதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு வணிக சங்கத்தின் பேரமைப்பு சார்பாக, 42வது மாநில மாநாடு வணிகர் அதிகார பிரகடன மாநாடாக நடத்தப்படுகிறது. மாநாட்டில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
அதில், சாமானிய வணிகர்களை பாதுகாப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் சிறப்பு பாதுகாப்பு சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும்.வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ள தொழில் உரிம கட்டணம் உயர்வு, தொழில் வரி, குப்பை வரி போன்றவற்றை ரத்து செய்ய வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்த இருக்கிறோம்.
மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், அழைத்து இருக்கிறோம். அவர்களிடம், ஜி.எஸ்.டி., வரி விதிப்பிலே பல்வேறு எளிமை திட்டத்தை ஏற்படுத்தி தர வேண்டும். சாமானிய வணிகர்களை பாதுகாத்திட வேண்டும் என மத்திய அரசு கொண்டு வந்துள்ள வணிக நலவாரியம் சீரமைத்து செயல்படுத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட உள்ளது.
அதில், வியாபாரிகளை, சாமானிய வியாபாரிகளை பிரித்து எடுத்து, குடும்ப நிதியாக அவர் மறைவுக்கு பிறகு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.
பொள்ளாச்சியை மாவட்டமாக விரைவாக தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கையை அழுத்தமாக வைக்க இருக்கிறது.
அதேபோல், வால்பாறையில், பல்வேறு சட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது. அதில் இருந்து, விடுவித்து வால்பாறை மக்கள், வணிகர்களை பாதுகாக்க மாநில அரசு முன்வர வேண்டும். இவை உள்ளிட்டவை பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் கொண்டு வரப்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.