ADDED : ஜூலை 13, 2024 12:53 AM

அ நிறம் | அளவு
வடவள்ளி;கோவை சட்ட கல்லூரி வளாகத்தில், புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சட்ட கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து, சட்டக்கல்லூரி மாணவர்கள், கல்லூரி வளாகத்தின் முன், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், இந்த மூன்று சட்டங்களும், போலீசாருக்கு ஆதரவாகவும், மக்களின் உரிமைகளுக்கு எதிராகவும் உள்ளது. இதனை, மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். நாடுமுழுவதும் போராட்டத்தில் ஈடுபடும் வக்கீல்களுக்கு ஆதரவளிப்போம் என, கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
