/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
/
வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
ADDED : ஆக 23, 2024 09:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பால், கோவை நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது.
திருநெல்வேலியில், வக்கீல் சரவணராஜ்,42, என்பவர் நிலப்பிரச்னை தகராறில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இக்கொலைக்கு கண்டனம் தெரிவித்தும், வக்கீல்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற கோரியும், வக்கீல்கள் ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்க கூட்டுக்குழு (ஜேக்) சார்பில், முடிவு செய்யப்பட்டது. ஜேக் வேண்டுகோள் படி, கோவையில் நேற்று 3000 க்கும் மேற்பட்ட வக்கீல்கள், நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால், அனைத்து நீதிமன்றங்களிலும், வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது.