/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டில்லியில் போராட்டம் வக்கீல் சங்கம் முடிவு
/
டில்லியில் போராட்டம் வக்கீல் சங்கம் முடிவு
ADDED : ஜூலை 25, 2024 12:26 AM
கோவை : மூன்று சட்டங்களுக்கு எதிராக, டில்லியில் போராட்டம் நடத்த வக்கீல் சங்க கூட்டுக்குழு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்திற்கு, எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வக்கீல்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
புதிய சட்டங்களை ரத்து செய்யக்கோரி, கோவை மாவட்டத்தில், வரும் 30 ம் தேதி வரை, தொடர் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.
இதற்கிடையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்க கூட்டுக்குழு(ஜேக்) சார்பில், வரும் 29 ம் தேதி, டில்லி, ஜந்தர் மந்த் பகுதியில் போராட்டம் நடக்கிறது. இதில், அனைத்து வக்கீல்கள் சீருடையுடன் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில், கோவை வக்கீல் சங்க உறுப்பினர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.